Sunday, April 19, 2009

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்! அண்மையில் வெளிவந்த வில்லு திரைப்படப் பாடலொன்றின் வரிகளில் மனதில் நங்கூரமிட்டு நின்று கொண்ட வரிகள் இவை!

வழமையான ஹீரோ அறிமுக/பில்டப் பாடல் தான் இது!
விஜய்க்கான வரிகளோடு இந்த வரிகளும் இடைநடுவே இசை ஒய்ந்து ஒலிக்கும் போது,முதல் தடவை கேட்டபோதே மனதை நெருடியது வருடியது!
அவரது அண்மைக்கால அரசியலுக்கான ஆயத்த அதிரடிக்கிடையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் இந்திய அரசைத் தலையிடக்கோரி தந்தி அனுப்பச் சொல்லியும் பின் தன் ரசிகர்களின் உண்ணா விரதப் போராட்டம் மூலமாகவும் இலங்கைப் பிரச்சினையிலும் தான் அக்கறையுடையவர் என்பதையும் காட்டியிருந்தார்.

இலங்கையிலும் ஏராளமாக உள்ள விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் மற்ற முன்னணி இளம் நடிகர்கள் குரல் வெளிப்படையாகக் கொடுக்காத போது தம் இளையதளபதி முன்வந்து நின்றது பெருமிதத்தையும் கொடுத்திருந்தது.

தேவிஸ்ரீ பிரசாதத்தின் இசையில் 8 பாடல்களும் வகை வகையாக இருந்தபோதும் எங்கள் பலபேருக்கும் பிடித்துப் போனது 'ராமா ராமா' என்ற இந்தப் பாடல் தான்!
'அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்' என்ற இந்த வரிகள் தான் இந்தப் பாடலின் ஹிட்டுக்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?

பாடல் வரிகளை கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார். விஜய்க்காக அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக ஹீரோ அறிமுகப்பாடல்களை கபிலன் தான் எழுதி வருகிறார். இப்படிப் பாடல் எழுதியவுடன் ஈழம் வந்துவிடுமா? அல்லது அகதி மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்று கிறுக்கு தனமா கேட்கக் கூடாது?

வியாபாரச் சந்தைகளாக மட்டுமல்ல வேதனைகளின் விளை நிலமும் எம்மவர் வாழுமிடங்கள் என்பதனை சர்வதேச அகதிகளான எம்பற்றி ஒரு சில பாடல்கள் வந்தாலும் அவையும் வரலாற்றுப் பதிவுகளாகட்டும்.

இதுபோலவே ஈழம் பற்றி ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வந்த திரைப்பாடல்கள் பற்றி யோசித்த போது....

(1)ஞானப்பழம் - யாருமில்லாத தீவொன்று
எழுதியவர் - பா விஜய்
இசை – கே பாக்யராஜ்
பாடியவர்கள் - உன்னிகிருஷ்ணன், சுஜாதா
'ஈழத்தில் போரோய்ந்து தேன்முல்லைப் பூப் பூத்து நீ சூட்டத் தரவேண்டுமே'
ஒரு பத்திரிகையாளனாக வரும் கதாநாயகன் காதல் பாடலிலும் சமூக உணர்வை வெளிப்படுத்துவதாக வரிகள் அமைந்திருக்கும்.

(2) பூவெல்லாம் உன் வாசம் - புதுமலர் தொட்டு
எழுதியவர் - வைரமுத்து
இசை – வித்யாசகர்
பாடியவர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி
'இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து'
காதல் வருவதை முன்னிட்டு ஒயாத சிலவற்றை நிறுத்தச் சொல்லி கவிஞர் சொல்லும் காதல் பாடல் இது!
ஒயாத ஒன்று கருதப்பட்ட இலங்கை உள்நாட்டுப் போர் கூட இந்தத் திரைப்படம் வெளிவந்த போது நின்று தற்காலிக சமாதானம் ஏற்பட்டது ஒரு ஆச்சரியம் தான்!

(3) விடை கொடு எங்கள் நாடே – கன்னத்தில் முத்தமிட்டால்
எழுதியவர் - வைரமுத்து
இசை – ஏ ஆர் ரஹ்மான்
பாடியோர் - எம் எஸ் விஸ்வநாதன்,மாணிக்க விநாயகம்,பல்ராம்,ரைஹானா
பாடல் முழுவதுமே ஈழத்தமிழத்தின் துயர் பற்றி இடப்பெயர்வின் துயர் பற்றி சொந்த மண்ணை சொந்தங்கள் விட்டு அகதிகாளகப் புலம்பெயரும் அவலம் பற்றியே ஒலக்குரலாயப்பாடல் ஒலிக்கிறது. எப்போதும் கேட்டாலும் கண்கலங்கும்.

(4)நந்தா - கள்ளியடி கள்ளி
எழுதியவர் - தாமரை
இசை – யுவன் ஷங்கர் ராஜா
பாடியோர் - அனுராதா ஸ்ரீராம்,மதுமிதா
அகதியாக வந்து இந்தியக் கரை சேர்த்த ஒரு கன்னிப் பெண்ணின் முதல் காதல் அனுபவப் பாடல்! யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையும் அழகாகக் கையாண்டு அகதிக்குக் காதல் வருவதை அற்புதமாக வடித்திருப்பார் தாமரை. 'எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்; தமிழன் தமிழன் தான்'
என்ற வரிக்கும் தொடர்ந்து ஒரு சிறுமியின் குரலில் வரும்
'புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா'
என்ற வரிகளும் ஒரு வித ஏக்கம் தருபவை.

5.ராமேஸ்வரம் - எல்லோரையும் ஏற்றி
எழுதியவர் - கபிலன்
இசை – நிரு (பிரான்ஜில் வசிக்கும் இலங்கையர்)
பாடியவர்கள்- மாணிக்க விநாயகம்,ஹரிச்சரன்,சூர்யா,ரேஷ்மி
ராமேஸ்வரம் அகதிமுகாமில் வாழும் மக்கள் தங்கள் ஏக்கங்கள் எதிர்ப்பார்ப்புக்களைச் சொல்வதாய் அமையும் பாடல்!
'எல்லோரையும் ஏற்றிப் போகக் கப்பல் வருமா'
'அட தூரம் கையில் வருமா - இல்லை ஈரம் கண்ணில் வருமா'

நல்லூர்க் கோவில் நாயனம், புகையிலை, தங்கச்சி, பனைமரம், பகிடி, புட்டு, தேங்காய், சம்பல், சொதி என்று யாழ்ப்பாணச் சுவைகளைத் தொட்டு வைக்கிறது பாடல் வரிகள்.

முத்துகுமாரின் வரிகளின் கனலும்,ஏக்கமும் ஈழத் தமிழ்ரின் ஏக்கங்களைத் தாங்குகின்றன
"நடந்தது எல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா?
நாளைக்காவது எங்கள் குழந்தை நலமாய் வாழாதா?
அத்தனை வழியையும் பொறுப்போம்
அதுவரை உயிருடன் இருப்போம்"
முத்தாய்ப்பு வரிகள்.. முடிவிலா சோகத்தை முன்கொண்டு செல்லும் நம்பிக்கையின் கீற்றாய் வரிகள்..

Saturday, April 11, 2009

அயன் - நான் guarantee !!!

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு வேகமான திரைக்கதையுடைய படத்தைப் பார்த்து, சென்னை ஏர்போர்ட்டில் ஆரம்பிக்கின்ற படம் கொங்கோ, மலேசியா, சென்னை என பல இடங்கள் பறந்து அதே ஏர்போர்ட்டில் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.


மிகவும் சாதாரணமாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து சாமார்த்தியமாக கடத்தல் செய்யும் இளைஞனாக படம் முழுவதும் வியாபித்திருக்கின்றார். கொங்கோ சண்டைக்காட்சியிலும், மலேசியா கார் ஷேசிங் காட்சியிலும் ஆக்சன் ஹீரோவாக மாறி, தமன்னாவுடன் காதல்காட்சிகளில் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ரிகாரணமாக சர்வசாதாரணமாக காதல் வயப்படுகின்றார். பாடல்களில் பழைய காக்க காக்க அன்புச்செல்வன் போல் மிடுக்காகவும் அழகாகவும் இருக்கின்றார்.

தியேட்டரில் ஏன் இத்தனை பெண்கள் கூட்டம் என்பது சூரியாவின் சட்டை இல்லாத உடம்பை பார்த்த்போதுதான் புரிந்தது. பெரும்பாலும் முதல் வாரத்துதில் தியேட்டரில் இளைஞிகள் கூட்டம் இருக்காது ஆனால் இரண்டாவது நாளே சூரியாவைப் பார்க்க ரொம்பக்கூட்டம்.

(ஜோதிகா உங்கள் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்)

கல்லூரியில் அறிமுகமானவர் தமன்னா கதாநாயகியாக வந்துபோகாமல் சில இடங்களில் குறிப்பாக காதல்காட்சிகளில் ஜோதிகாவைப் பொறாமைப்பட வைத்து நடித்தும் உள்ளார். அசின் அல்லது நயந்தாரா செய்திருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.
நல்லா மேலே வாங்கக்கா!

விஜய் டிவி புகழ் ஜெகனுக்கு முதல் முறையாக ஒரு நல்ல நீண்டநேரம் வரக்கூடிய பாத்திரம் ஜெகனின் ஜொலிக்கிறார். ஜெகனுக்கு இனிமேலாவது நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்! .
சூர்யா gap விடும் இடமெல்லாம் மனிதர் பட்டை கிளப்புகிறார்! அவரது timing sense of humour அபாரம்! சீனியர் கருணாவையும் ஓரங்கட்டி விடுகிறார்.

ஜெகன் தன் தங்கையை சூர்யா லவ்வும்போது மாமாவாக மாறிப்போவது நல்ல காமெடி.. நல்ல காலம் எனக்கும் கூட பிறந்த தங்கைகள் இல்லை.

சூர்யா – smart & class ! அவரது துள்ளல்,துடிப்பு,நடிப்பு நகைச்சுவை அனைத்துக்குமேற்ற மற்றுமொரு படம்! பல இடங்களில் விஜய்,அஜித் பட formulaக்கள் தெரிந்தாலும் சூர்யாவின் தனித்துவம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது.


விஜய் அஜித் நீங்கள் சூர்யாவிடம் நடிப்பு ரொம்ப கத்துக்க வேண்டி இருக்குங்கோ

ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் போலவே பின்னணி இசையிலுத் பிளந்து கட்டினாலும் ஒரு சில இடங்களில் சொதப்புகிறார்..
எனினும் பல இடங்களில் இவரை விட்டால் ரஹ்மானையும் மிஞ்சிவிடும் அபாரம்!

கடத்தலில் இப்படி இப்படியெல்லாம் வழிகளுண்டா?
சுங்கத்தினரும் கடத்தல்காரர்களும் அயனுக்கும் ஆனந்துக்கும் நன்றி சொல்வார்கள் - அல்லது வெளில வாய்யா வச்சுக்கிறோம் என்பார்கள் -

வேறெந்நத் தமிழ்படத்திலும் இதுவரை பார்க்காதளவுக்கு கடத்தலை அக்குவேறு ஆணிவேறாகப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் - ஒருவேளை அனுபவமோ?


கிளைமாக்ஸ் காட்சி கூட பல ஹொலிவூட் படங்களை ஞாபகப்படுத்தியது. நிறைய LOGIC ஓட்டைகள் இருந்தாலும் கூட சுவாரஸ்யத்தில் ஒன்றுமே உறுத்தவில்லை.
பாடல்காட்சிகளில் நேர்த்தி & நயம்.ஒவ்வொன்றிலுமே கலைநயம்,வெளிநாட்டுப் பயணம்,பணச் செழுமை தெரிகிறது.
அறிவுரை சொல்லும் காட்சியொன்றில் இயக்குனர் சங்கரையும் வருகிறார்!

தனக்கென்று தனி formulaவை வைத்துக் கொள்ளாமல் இப்படியே வேறுபட்ட கதைகளை மாற்றி மாற்றி எடுத்தால் என்ன வேடத்தில் சூர்யா நடித்தாலும் யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அண்மைக்காலத்தில் நான் பார்த்த படங்களின் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் ரசித்த ஒரு படம் அயன்!


ஜாலியாக ஒரு 2 ½ மணிநேரத்தை ரசிக்க 'அயன்' Jolly guarantee !

Monday, March 16, 2009

"கெதியன பந்தை எடுறா. அரக்கிறாய் எருமை மாடு மாதிரி!"
மெதுவாக பந்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்த சித்தன் கோபம் கொப்பளிக்க முறைத்தபடி திரும்பி பார்த்தான்.

காரணம் கத்திய பொன்னானின் மகன் சுள்ளானுக்கு 10வயசு திட்டுவாங்கிய சித்தனுக்கோ 17வயசு.

சுள்ளானால் தொடர்ச்சியாக போடப்பட்ட ஐந்தாவது நோ போலுக்கும் கமிலேஸ் சிக்சர் விளாசிவிட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டிப்போய் பற்றையொன்றினுள் புகுந்துவிட்டத.

சித்தனின் சைட்டில் எல்லாரும் நம்பிக்கையிழந்து விட்டிருந்தார்கள். விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த மச் இப்ப இந்த சனியனிட்ட பந்தைக்குடுத்து...சே!”

என்னடா முறைக்கிறா? அந்த பத்தைக்கதான் போனது போய் கெதியன எடுத்தெறி… போ!”

சித்தனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது. ஆனால் மற்றவர்கள் பிரச்சனை வேண்டாம் அடங்கிப்போகுமாறு பரிதாபமாய் சாடை காட்ட மனதுள் கறுவியபடி பற்றைக்குள் கைவிட்டான்.

என்ன நடக்குது? எங்க நடக்குது? ஏன் 10 வயது பெடியன் பேசுறதை கேட்டுக்கொண்டு எல்லாரும் அடக்கி வாசிக்கிறாங்கள்? குழப்பமாயிருக்கா? சொல்லுகிறன் கேளுங்க

கிரிக்கெட் விளையாட்டு பிரசித்தி பெற்ற காலம் அது. இந்த நேரத்தில்தான் மற்ற கிராமங்களுக்கு போட்டியாக நாங்களும் ஒரு விளையாட்டு கழகத்தை தொடங்கி ஏதாவது த்ரில்லாக செய்ய எண்ணினோம்.

தேவைப்பட்டது ஒரு வெறும்காணி, மற்றது பட், விக்கட், பந்து வாங்க கொஞ்சம் பணம். பணம் பிரச்சனையில்லை. காரணம் கண்ணாவின் மாமா கனடாவில் குளிரில் நடுங்கி பெற்றொலடிக்கிறார். ஆக காசு மரமே இருக்கு. நோ ப்ராப்ளம்! ஆனால் விளையாட இடம்?
தரிசுக்காணியக்கூட ஒருவனும் தரமாட்டனெண்டுட்டான். பெடியங்கள் விளையாடினா காணி இறுகிப்போகுமாம் பிறகு பயிர் பச்சை ஒண்டுமே விளையாதாம். கருத்தரித்த எம் எண்ணங்கள் கருவிலேயே கலைக்கப்படும் அபாயங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்திலதான் கடவுள் போல வந்தான் பொன்னான்.

முந்தி பெரிசா வசதியல்லாதவன்… ஆனா கதை சொல்லப்படும் நேரத்தில அவன் ஒரு கோடீஸ்வரன் .. எப்பிடி? அவன் வச்சிருந்தது ஒரே ஒரு ட்ரக்டர். மணல் அள்ளுற தொழில். அள்ளி அள்ளி ஊருக்கு நடுவில பெரிய கடலையே கொண்டந்துட்டான் பென்னான். மண்ணுக்கு பேர் போன பூமி நாசமாப்போச்சுது அவனால.
இப்ப அவனட்ட ஏழோ எட்டு ட்ராக்டர அதோட அவனுக்கொரு அடியாள் (மணலள்ளுற) கும்பல் வேற. அள்ளுற மணலை விக்கிறதுக்கு முன்னாடி ஒரு காணியில போட்டு சேத்து வப்பான். அப்பிடியே அந்த மணல நாய் மற்றும் மனுசங்க கிட்ட இருந்து பாதுகாக்க ஒருவழிய அவன் தேடிக்கிட்டிருந்த போதுதான் கதைல நாங்க வாறோம் நாய் மாதிரி.

கண்டிசனோட காணியில விளையாட அனுமதி கிடைத்தது. காணிக்க நாய் வராம பாத்துக்கணும். அதோட தன் மகன் சுள்ளானையும் ஆட்டத்தில சேத்து அவனோட பிரச்சனைப்படாம விளையாடோணும். அவ்வளவுதானே ஓகே எண்டு சந்தோசத்துடன் கழகம் ஆரம்பிக்கப்ட்டது. ஆனாலும் அபசகுனங்கள் பல தெரிவதாக ஆரம்பத்திலேயே காணப்பட்டது.

கடும் சிரமதானத்தின் பின் காணியை செப்பனாக்கி , (YOUNG FRIENDS) என்று பேரும் வைத்து, கனடா மாமாவின் பணத்தில் ஆளாளுக்கு ஒரு பேட்டும் வாங்கி. தடல்புடலா கழகம் ஆரம்பிக்கப்ட்டது.

முதல் நாள்.

போமாலிட்டிக்கு (formality ) நம்ம கன்னி மைதானத்தில பக்கத்து ஊர் பொடிப்பசங்களோட ஒரு சின்ன மாட்ச்(Match). டொஸ்போடுறதுக்கு கப்டின்(captain) ரெண்டு பேரும் போகணும். நம்ம சைடிலருந்து சித்தன் வெளிக்கிட ஒரு வொய்ஸ் வந்துச்சு.

”எங்கடல நாந்தான் கப்டின்.”????” உங்களுக்கு அதில ஏதாவது பிரச்சனைன்னா நீங்க மைதானத்திலருந்து வெளில போகலாம்” சொன்னது பொன்னான் மகன் சுள்ளான் அப்பதான் விளங்கிச்சு கணக்கா ஆப்பில குந்திட்டமே எண்டு…

ஆரம்பத்தில் சின்ன பெடியன்தானே மெவாக சமாளிப்பம் என்று எண்ணி அப்பன் ராசா இது சரிவராது என்று விளக்கவுரை நடத்த அவன் தன் கொள்ளையில் சற்றும் தளராமல் தனிக்கட்டையாக தாறுமாறான வார்த்தைப் பிரயோகங்களுடன் சற்றேனும் மரியாதையின்றி எடுத்தெறிங்து பேச நிலமை சிக்கலாயிற்று…

வாக்குவாதத்தில அந்தப்பக்கமாக கிணத்தில தண்ணி குடிக்க வந்த பொன்னானின் கையாள் ஒருவன் சித்தனுக்கு அடித்துவிட நிலமை நாறிவிட்டது. கடும் கோபத்துடன் வெளியேற வெளிக்கிட்ட எங்களை கட்டாயமாக சுள்ளானின் தலைமையில் விளையாடவிட்டு ஒரு கண்கொள்ளாக்காட்சிய அரங்கேற்றினான் அந்த அடியாள்.

விளையாடிய 5 ஓவரும் அவன்தான் போல் போட்டான். அதுவும் எல்லாம் நோபோலும் வைட் போலும்… அம்பயர்(எதிர் டீம் பெடியன்) சுள்ளாண்ட தூசணத்துக்கு பயந்துபோய் அதுகளை நல்ல போல் எண்டு அறிவித்தாலும் ஒரு மணிநேரமாக வீசப்பட்ட அந்த 5 ஓவர்களின் முடிவில் எதிரணி 150 ரண்களை பெற்றிருந்தது… சொன்னா அழுகை வரும்..

அவங்க கொஞ்சங்கூட ஒரு ஈவிரக்கமில்லாம அடிச்ச அடியில பந்தெல்லாம் சும்மா சந்திரமண்டலம் இந்திரமண்டலமெல்லாம் போய் வந்திச்சு… ஓடி ஓடி அத பொறுக்கி எங்களுக்கெல்லாம் கேணியா சிம்ப்டம்ஸ் வேற தெரியத்தொடங்கிட்டுது. கருமாரி அம்மன் கருணையில ஒருமாதிரி பீல்டிங் முடிஞ்சுது.

அடுத்து பாட்டிங்.

ஓபனிங்காக இறங்கிய சுள்ளான் முதலாவது போலிலேயே அவுட்டாகிவிட , போலரினை கதாநாயகனாக உருவகித்து ஒரு காமசூத்திராவையே கதாகாலேட்சபமாக செய்தான் சுள்ளான் அவ்வளவுதான். அத்தோடு பின்னங்கால் பிடரியிலடிபட ஓடிய எதிரணியினர்.